வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:08:00 (30/06/2018)

``சிலை கடத்தல் வழக்கில் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு..?” - முத்தரசன் கேள்வி!

சிலைக் கடத்தல் வழக்கில் அதிகாரத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதால், தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பாக முத்தரசன் கேள்வி

நேற்று விருதுநகருக்கு வருகை தந்த முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஜனநாயக ரீதியில் போராடுபவர்களைக் கைது செய்யும்  தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளைக் கண்டித்து  வரும் ஜூலை 5-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சிலைக் கடத்தல் வழக்கில் அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதால்தான், சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.'' என்று  குற்றம்சாட்டினார். 

நேற்று முந்தினம் மதுரை வந்த சி.பி.எம்.செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இதே குற்றச்சாட்டை கூறினார். இன்று சட்டசபையில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் இதுசம்பந்தமாக கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முதலமைச்சர் சட்டசபையில், அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு போதுமான உதவிகளைச் செய்துவருவதாக நீண்ட பதில் அளித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க