வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் முடக்கம்: கிரண்பேடியின் அடுத்த அதிரடி

அரசுக்கு வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை முடக்க அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி அரசு மின் துறைக்கு சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு கட்டண பாக்கித் தொகை நிலுவையில் உள்ளது. பல்வேறு வணிக நிறுவனங்கள், அரசியல் பின்னணி கொண்டவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் கோடிக்கணக்கில் பாக்கித் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதையடுத்து நீண்ட காலமாக மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்கள் பெயரை நாளிதழ்களில் வெளியிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து நான்கே நாளில் சுமார் 50 கோடி ரூபாய் பாக்கித் தொகை மின் துறைக்கு வசூலானது. கிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சி தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ``நீண்ட காலம் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், வரிகளைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால் அவர்களின் சொத்துகளை சட்டப்பூர்வமாக அடையாளப்படுத்தி, அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அளவுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்னணு ஏலம் விடலாம் என்றும் சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்று அந்தச் சொத்துகளை அரசே ஏற்கும் நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!