வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (30/06/2018)

கடைசி தொடர்பு:13:05 (30/06/2018)

ஜெயேந்திரருக்கு துளசி ஸ்தாபனம்… சங்கர மடத்தில் நித்திய பூஜை ஏற்பாடுகள் தீவிரம்!

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69-வது மடாதிபதி ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். மார்ச் 1-ம் தேதி சங்கரமடத்தில் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர்  பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் துளசி ஸ்தாபனம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜெயேந்திரர், சங்கர மடம்

ஜெயேந்திரர் மறைவுக்குப் பின்பு, அவர் பிருந்தாவன பிரவேசம் செய்த இடத்தில் நித்ய பூஜைகளும், நித்யபடி பாயஸ தானமும், மாஸிக ஆராதனையும் நடைபெற்று வருகின்றன. பிருந்தாவனத்தில் துளசி மாடம் போன்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயேந்திரர் அடக்கம் செய்த இடத்தில் கூர்ம பீடத்துடன் கருங்கல் பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நாளை துளசி ஸ்தாபனம் செய்ய உள்ளதாகச் சங்கர மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கைலாஷ் மானசரோவர் முதல் கன்னியாகுமரி வரை ஜெயேந்திரர் விஜயம் செய்த இடத்திலிருந்து மண் கொண்டு வரப்பட்டு பிருந்தாவனத்தில் வேத கோஷங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுக்கான வேலைகளைச் சங்கர மடம் தீவிரமாக செய்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க