ஓய்வு பெற்ற நாளில் துப்புரவுப் பணியாளர்களை நெகிழவைத்த நகராட்சி ஆணையாளர்!

தேனி மாவட்டம் போடி நகராட்சியில் கடந்த 30 ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்த நால்வர் இன்று ஓய்வு பெற்றனர். அவர்களைத் தனது காரில் அழைத்துச் சென்று ஒவ்வொருவரது வீடுகளிலும் விட்டுவிட்டு வந்த போடி நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதனுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

துப்புரவுப் பணியாளர்களுடன் நகராட்சி ஆணையாளர்

இது தொடர்பாக சுவாமிநாதனிடம் நாம் பேசினோம், ``அவர்களைத் துப்புரவுப் பணியாளர்கள் என்று சொல்வதே தவறு. உண்மையில் அவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். போடி நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக வேலை செய்த பழனியம்மாள், பழனிச்சாமி, தங்கையா, பெருமாள் ஆகிய நால்வர் இன்று பணி நிறைவு பெற்றனர். அவர்களுக்குப் பணி நிறைவு விழாவை நகராட்சி அலுவலகத்தில் நடத்தினோம். அவர்களுக்கு மரியாதை செய்து, பி.எஃப் பணம் கொடுத்தோம். அதைத்தொடர்ந்து எனது காரில் அவர்களது வீட்டுக்கே அழைத்துச் சென்றோம். நமக்காக, நமது சுற்றுப்புறத்துக்காகத் தினமும் உழைத்துக்கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, இப்படி ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக நானும் நகராட்சி அலுவலர்களும் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். அவர்களும் மன நிறைவோடு வீட்டுக்குச் சென்றனர்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!