`காவல்துறை உதவியுடன் சட்டவிரோத லாட்டரி விற்பனை' - கனிமொழி காட்டம்!

'காவல்துறையின் உதவியுடன், தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது' என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 

கனிமொழி

தமிழகத்தில் லாட்டரி விற்பனை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுவிட்டாலும் ஆங்காங்கே லாட்டரி விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டவிரோதம் இல்லை என்பதால், தமிழக - கேரள  எல்லைப் பகுதிகளில் இது சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். அதேபோல, மாநிலத்தின் உள்ளேயும் சில இடங்களில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. கடந்த வருடம், வட சென்னை பகுதியில் லாட்டரி விற்பனை கண்டுபிடிக்கப்பட்டதே அதற்கு எடுத்துக்காட்டு. 

எனினும் லாட்டரி விற்பனையை போலீஸ் கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இதே குற்றச்சாட்டை தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழியும் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``காவல்துறையின் உதவியுடன் தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், காவல் துறையோ அரசை எதிர்ப்பவர்களைக் கைதுசெய்வதில் முனைப்பாக இருக்கிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!