சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி  தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியுடனானப் போட்டியில் டிரா செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 

ஹாக்கி

உலகின் முன்னணி 6 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத்  தொடர் தற்போது இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் போட்டியை  நடத்தும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தத்  தொடரில் சிறப்பாக  விளையாடிய  இந்திய அணிக்கு இந்தத்  போட்டியை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற நெதர்லாந்து அணி இந்தப் போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும். 

இதனால் தொடக்கம் முதலே அனல் பறந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சம நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இந்திய அணியின் மந்தீப் சிங் அதிரடியாக 47 -வது நிமிடத்தில் கோல் பெற்றுத் தந்தார். ஆனால், 55 நிமிடத்தில் நெதர்லாந்து பதில் கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் சமநிலைக்கு வந்தது. ஆனால் நெதர்லாந்து அணி கோல் அடித்த பின்னர், இந்திய வீரர்கள் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். இதற்குப் பலனும் கிடைத்தது. நெதர்லாந்து அணியின் பல முயற்சிகள் தடுக்கப்பட்டது. குறிப்பாக கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு கோல் முயற்சிகளைத் தடுத்தார். இறுதியில் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. 

போட்டி டிரா ஆனதால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை இன்று  எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக 5 மற்றும் 6 -வது இடத்துக்கான மோதலில் பெல்ஜியம் பாகிஸ்தான் அணிகளும், 3 மற்றும் 4 -வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்து அர்ஜெண்டினா அணிகளும் மோதவுள்ளன.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!