வரிசையில் காத்திருத்த சுற்றுலாப் பயணிகள்; களத்தில் இறங்கி விசாரித்த நாராயணசாமி..! வைரலாகும் வீடியோ

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திருப்பதி கோயிலுக்குச் சென்று விட்டு நேற்று மாலை புதுச்சேரி திரும்பி கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரி எல்லையில் கோரிமேடு பகுதியில் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதனைப் பார்த்த நாரயணசாமி, உடனை தனது காரை நிறுத்தி அந்த அலுவலகத்தினுள் சென்றார். அப்போது பர்மிட்டிற்காக தாங்கள் ஒரு மணி நேரமாக காத்திருப்பதாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்கள் அவரிடம் புகார்  தெரிவித்தனர்.

நாரயணசாமி

அதையடுத்து உள்ளே சென்ற முதல்வர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்த போது அங்கு கணினி குறைவாக இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதற்கு நாராயணசாமி, 'வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். கணினி இல்லையென்றால் கையால் எழுதிவிட்டு பின்னர் கணினியில் பதிவு செய்ய வேண்டும்' என்று உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் கூறினார்.

தொடர்ந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த வெளி மாநிலத்தவர்களிடம், "இன்று ஒருநாள் மட்டும் பொறுத்து கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டு புறப்பட்டார். அந்தக் காட்சிகளை அங்கு வரிசையில் நின்றவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!