இன்று தொடங்கியது மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு..!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

கலந்தாய்வு

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மே 6-ம் தேதி தேசிய அளவில் நீட் தேர்வு நடைபெற்று பின்னர் அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பின் ஜூன் 28-ம் தேதி மருத்துவச் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

இன்று தொடங்கிய கலந்தாய்வு வரும் ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று சிறப்பு பிரிவினருக்கும் நாளை முதல் பொது பிரிவினருக்கும் நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் தங்களின் நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு, நீட் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 10,12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுவரவேண்டும் என்றும் மாணவர்களுடன் வரும் பெற்றோர்களும் ஆதார் அட்டையை உடன் கொண்டுவரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!