வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (01/07/2018)

கடைசி தொடர்பு:14:15 (01/07/2018)

உத்ரகாண்டில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..! 20 பேர் பலியான சோகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 60 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து

உத்தரகாண்ட் மாநிலம் பாரி கர்வால் மாவட்டத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மலைப்பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 

பேருந்து

பேருந்து சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்  படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என முன்னதாக காவல்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டவர்களில் சிலர் இறந்துள்ளதாக கூறபடுகிறது இதனால் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.