வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (01/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (01/07/2018)

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு உடல்நலம் பாதிப்பு..! மதுரை அப்போலோவில் அனுமதி

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் சுவாசக்குழல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூன்று தம்பிகள். ஒரு அண்ணன் இறந்துவிட்டார். மேலும் நான்கு சகோதரிகள் உள்ளனர். இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன் உடல் நலக்குறைபாடு காரணமாக தற்போது மதுரை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 நேற்று இரவு பாலமுருகனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்குழல் பிரச்சனை காரணம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்று மதியம், மேல்சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் சென்னை அப்பல்லோவிற்கு பாலமுருகன் அழைத்துச்செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவி மற்றும் பிரதீப், தம்பி ஓ.ராஜா மற்றும் குடும்பத்தினர் சென்னை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்பி மதுரை அப்போலோவில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.