கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை..! பிஷப் மீது வழக்குப்பதிவு

கோட்டயம் அருகில் கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோட்டயம் அருகில் கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

கோட்டயம் சீரோ மலபார் சபையைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ முளைக்கல் என்பவர் குறவலிங்காடு விருந்தினர் மாளிகையில் அடிக்கடி தங்குவது வழக்கம். 2014 மே மாதம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பிஷப் அன்று இரவு குறவலிங்காடு விருந்தினர் மாளிகைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக 13 முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, மேஜர் ஆர்ச் பிஷப் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரியிடம் புகார் அளித்துள்ளார். சர்ச் நிர்வாகம் விசாரணை நடத்தியிருக்கிறது.

இதற்கிடையில் கன்னியாஸ்திரியை சமாதானப்படுத்த பிஷப் தரப்பு முயற்சிசெய்திருக்கிறது. கன்னியாஸ்திரி சமாதானம் ஆகாததால் பிஷப்தரப்பு காவல்துறை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறது. பொறுமையிழந்த கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை குறித்து கோட்டயம் எஸ்.பியிடம் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் பிஷப் பிராங்கோ முளைக்கல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பாதிரியார்கள் தொடர்ந்து சிக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!