`ஜி.எஸ்.டியால் பொருளாதாரத்துக்கு ஆபத்தில்லை!’ - பியூஸ் கோயல் விளக்கம்

சரக்கு மற்றும் சேவை வரியால் பொருளாதாரத்துக்கு எந்த ஆபத்துமில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பியூஸ்


சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் அதுவரை அமலில் இருந்த 12க்கும் மேற்கபட்ட வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தன. இந்த நடவடிக்கையை  நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என மத்திய அரசு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு ஆனைதை சிறப்பான முறையில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒருபகுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பியூஷ் கோயல், `ஜி.எஸ்.டியானது வரி விதிப்புகளில் வெளிப்படைத்தன்மை வாய்ந்தது. பொருளாதாரத்திற்கு நெடுங்காலம் பயன்தரக்கூடிய முறையே இந்த ஜி.எஸ்.டி. இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஆபத்து எதும் ஏற்படவில்லை;பொருளாதார வளர்ச்சி பாதிப்படைந்ததாக கூறுவது தவறு என்று அவர் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!