`ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை!’ - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

 ''ஜி.எஸ்.டி.யால் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றமடைந்து வருகிறது. வரி கட்டுவதில் பொது மக்கள் சந்தித்து வந்த சிரமங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வரி வசூல் பல மடங்கு உயர்ந்துள்ளது'' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இன்று வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தானும் ஜனநாயக கடமையாற்றாமல் ஜனநாயக கடமையாற்றி வரும் ஆளுநரை தடுப்பது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  இழந்து வருவதை காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் அதிகரித்துள்ளது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ள அனைத்து பணமும் கருப்பு பணம் என உறுதியாகக் கூற முடியாது. தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. தமிழக அரசுக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை அள்ளி கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத பல சக்திகள், வளர்ச்சித் திட்டங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர்களின்  நடவடிக்கைகளை தமிழக அரசு எந்த காரணத்திற்காகவும் கண்டுகொள்ளக் கூடாது'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!