"தொழில் தொடங்க ஒரு கோடி வரை கடன்!" - டி.ஆர்.ஓ தகவல்!

 கரூரில் அத்தியாவசியமான மற்றும் அனைவரையும் கவரும் புதிய யுத்தியுடன் கூடிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவேர்களுக்கு நிதி ஒரு தடையில்லை என தொழில் முனைவோர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.
 

கரூர் ரெசிடென்ஸி ஹோட்டல் கூட்ட அரங்கில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கரூர் சார்பில் மாவட்ட வங்கியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பொருளாதார கருத்தரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் பேசுகையில்,``நிலவிவரும் கடுமையான வணிக போட்டிகளில் புதிய தொழில் முனைவோர்கள் அல்லது ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களைப் போட்டிச் சந்தைகளில் சந்தையிடவும், மக்களிடம் பிரபலபடுத்திக்கொண்டு செல்ல ஏதுவாக புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இயற்கையை நாடிச்செல்லும் இந்த காலச்சூழலுக்கு ஏற்ப தங்கள் பொருட்களை உற்பத்தி செய்திட வேண்டும். நல்ல திட்ட மதிப்பீடு இருந்தும் நிதி தடையால் முடங்கி விடாமல் தடுத்திட ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அமைப்பின் மூலம் வங்கியுடன் இணைந்து நிதியுதவி அளிக்கிறோம். அவர்களுடன் தொழில் முனைவோராகவும் இணைந்து தொழில் செய்திடவும், தொழில் முனைவோரையே நிரந்தர உரிமையாளராகவும் கொண்டு செயல்படவும் உதவ உள்ளார்கள். அனைவரையும் கவரும் புதிய தொழில் நுட்பங்களுடன் தொழில்முனைவோராக ஆர்வமுள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ஒரு கோடி வரை தொழிலின் தன்மைக்கேற்ப நிதி உதவி வழங்கப்படும். அரசு உரிமமும் விரைந்து பெற்றுத்தரப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!