`மாற்றப்படாத மாவட்ட தலைமை' - சிவகங்கை திமுகவினர் மத்தியில் நிலவும் அதிருப்தி! | Sivagangai dmk district secretary will not changed

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:05:00 (02/07/2018)

`மாற்றப்படாத மாவட்ட தலைமை' - சிவகங்கை திமுகவினர் மத்தியில் நிலவும் அதிருப்தி!

தி.மு.க தலைமை தென்மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. சில இடங்களில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பகுதிச் செயலாளர்கள் போன்ற பதவிகள் பறிக்கப்பட்டு அப்பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

பெரிய கருப்பன்


தா.கிருஷ்ணன் மாவட்டச் செயலாளராக இருந்த போது சிவகங்கை மாவட்டம் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக  இருந்தது. அந்த நேரத்தில் தா.கிருஷ்ணனுக்கு எதிராக சிவராமனை களத்தில் இறக்கிவிட்டார் அழகிரி. இவர்களின் பகையால் தி.மு.க வில் பெரிய கருப்பனுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து இன்று வரை இவர் தான் மாவட்ட செயலாளர். தேர்தல் நேரத்தில் வீடியோ வெளியானதில் இருந்து மேப்பல் சக்தி, ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, கென்னடி போன்றவர்கள் இவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள். இவர்கள் எல்லாம் பெரிய கருப்பன் தனி அரசியல் செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் புகார் வாசித்ததாக மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் மாவட்ட செயலாளர் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் எதிர் அணியினர் காத்திருந்த நேரத்தில் இன்று எதிர் அணியில் இருந்த வடக்கு ஒன்றியச் செயலாளர் மேப்பல் சக்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேப் போன்று கிழக்கு ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சுப.சின்னதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும் பெரிய கருப்பனின் ஆதரவாளர்கள். இதனால் பெரிய கருப்பனின் எதிர் அணியில் இருப்பவர்கள் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க