இரண்டாவது பிரசவத்துக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு! குழப்பத்தை தீர்த்து வைத்த அரசாணை

இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் அடுத்த இரண்டாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு உண்டு என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மகப்பேறு


கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள இந்த விடுமுறைச் சலுகை அளிப்படுகிறது. இந்த விடுமுறையை பிரசவத்திற்கு இடைப்பட்ட காலத்திலும் அல்லது  கருவுற்ற காலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலம் ஆகியவற்றை உள்ளடக்கியும் எடுக்க அனுமதி உள்ளது. இதற்கிடையே, முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் அடுத்த இரண்டாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க தமிழக அரசில் அனுமதி வழங்குவது இல்லை என்று புகார் இருந்து வந்தது.

இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கும் ஏராளமான புகார் சென்றது.  இந்த பிரச்னை  குறித்து அத்துறையின்  அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவனத்துக்கு  கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அத்துறையின்  செயலாளர் எஸ்.சுவர்னா, கடந்த  20- ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், ''முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரண்டாவது பிரசவத்துக்கும் பேறுகால விடுமுறை அளிக்கப்படும். குறைந்த பட்சம் 180 நாள் அல்லது அதிகபட்சம் 270 நாள் விடுமுறை உண்டு'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!