மருத்துவப் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு..! அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

மருத்துவப் படிப்பில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். 

மருத்துவக் கலந்தாய்வு

சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். அப்போது, 'கடந்த ஆறு ஆண்டுகளில், ஜெயலலிதா அரசு 1,000 மருத்துவ இடங்களை அதிகப்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான இடங்கள் வெளிப்படையான கலந்தாய்வுமூலம் நிரப்பப்படும்.

வெளிமாநில மாணவர்கள், போலி இருப்பிடச் சான்றிதழ்களுடன் இடம்பெறும் விவகாரத்தில், நீதிமன்ற அறிவுறுத்தல்கள் முறையாக செயல்படுத்தப்படும். தமிழகத்தில் புதிதாக இரண்டு கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ அனுமதி வழங்கியுள்ளதால், மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 3,501-ஆக அதிகரித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 70 சதவிகிதம் இடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!