வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:14:00 (02/07/2018)

உலகக்கோப்பை கனவைக் கலைத்த கவானிக்கு உதவிய ரொனால்டோ!

உலகக்கோப்பை கனவைக் கலைத்த கவானிக்கு உதவிய ரொனால்டோ!

லகக்கோப்பை தொடரில், போர்ச்சுக்கல் அணியை வீட்டுக்கு அனுப்பியதில் உருகுவே 'ஸ்ட்ரைக்கர்' எடிசன் கவானிக்கு முக்கியப் பங்கு உண்டு. சுவாரஸ் தந்த மின்னல் வேக பாஸை கவானி அட்டகாசமாக தலையால் முட்டி, கோல் வளைக்குள் தள்ளிய அழகே அழகு.

ரொனால்டோ

கடும் வேகத்தில் வந்த பந்தை எடிசன் கவானி அப்படியே கோலுக்குள் திருப்ப, கோல் கீப்பரால் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது. உருகுவே அணிக்கான இரண்டாவது கோலையும் மிக நேர்த்தியாக வளைக்குள் புகுத்தினார் கவானி. இந்த இரு கோல்களையும் எந்தக் கொம்பன் கோல்கீப்பராக இருந்தாலும் தடுத்துவிட முடியாது. முடிவில், போர்ச்சுக்கல் அணி உருகுவே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது. 

போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில், உருகுவே அணியின் ஆட்டம் அழகுற அமைய எடிசன் கவானி முக்கியக் காரணமாக இருந்தார். ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில், போர்ச்சுக்கல் அணியை மண்ணைக் கவ்வ வைத்த எடிசன் கவானிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடும் வலியால் அவதிப்பட்டார். இதைக் கவனித்த போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ எடிசன் கவானியை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று மைதானத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டார். அப்போது, ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ரொனால்டோவின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பாராட்டினார். ரொனால்டோவின் செய்கை, சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டுவருகிறது. 'ரொனால்டோ கோப்பையை வெல்லவில்லையென்றாலும் இதயத்தை வென்றுவிட்டார்' என்று கால்பந்து ரசிகர்கள் சொல்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க