முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார் அனுக்ரீத்தி வாஸ்!

மிஸ் இந்தியா பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். 

அனுக்ரீத்தி வாஸ்

திருச்சியைச் சேர்ந்தவர் அனுக்ரீத்தி வாஸ். இவர், சென்னை லயோலா கல்லூரியில் இலக்கியப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், 2018-ம் ஆண்டிற்காக மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அனுக்ரீத்தி, பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார். 27 ஆண்டுகள் கழித்து தமிழ் பெண் `மிஸ் இந்தியா பட்டம்' வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மிஸ் இந்தியா பட்டம் வென்றதுக்குப் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் அனுக்ரீத்தி. இரு தினங்களுக்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தமிழகத்தைச் சேர்ந்த நான், மிஸ் இந்தியாவாகத் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப் போட்டிக்குத் தயாராகிவருகிறேன். அதை நோக்கி கவனம் செலுத்திவருகிறேன். `உலக அழகி பட்டம் பெறுவதே எனது கனவு; உலக அழகி பட்டம் பெற்ற பின், என் படிப்பை மீண்டும் தொடர்வேன்' என்றார். 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அனுக்ரீத்தி வாஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!