கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது! உச்ச நீதிமன்றம்

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் 'கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  கூடங்குளம் அணுஉலை

கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான உரிய தொழில்நுட்பம் இல்லை. எனவே, அதுவரை கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 'உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கோ அல்லது கழிவுகளை அகற்றும் வசதியோ இல்லாமல் அணு உலை இயங்கிவருகிறது. அதனால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் அழிந்துவருகிறது' என்றார்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், 'அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் தேவை' என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும். அணுஉலை அமைப்பதற்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரையில் அணுஉலையின் செயல்பாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது' என்று உத்தரவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!