`தமிழகத்துக்கு 30 டி.எம்.சி தண்ணீர் திறக்கவும்’ - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

`தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' எனக் கர்நாடகத்துக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில், காவிரி ஆணையக் குழுத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காலை 11 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும் கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' எனக் கர்நாடகத்துக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று தொடங்கிய முதல் கூட்டத்திலேயே தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!