`ஆணையத்தின் உத்தரவை மதிக்க வேண்டும்' - மசூத் உசேன் பேட்டி

`காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்'' என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறினார்.

மசூத் உசேன்

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி  ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஜூலை மாதம் தமிழகத்துக்கு திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

காவிரி

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் `காவிரி நதி நீர் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆணையம் செயல்படுவதற்கான கட்டமைப்பு, அணைகளில் நீர் இருப்பு, நீர் திறப்பு அளவு தகவல் ஆலோசிக்கப்பட்டன. ஜூலை மாதத்துக்குரிய காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஜூன் மாதத்தில் கூடுதலாக தந்த நீர் போக மீதியை தமிழகத்துக்கு கர்நாடகா திறக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் உட்பட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும். ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு கூடுதலாக 3 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு 30 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்' என்று தெரிவித்தார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் கூட்டம் ஜூலை 5-ம் தேதி நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!