இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! | high court grants Conditional bail to director Bharathi raja

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (02/07/2018)

கடைசி தொடர்பு:20:28 (02/07/2018)

இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

தேசத்துக்கு விரோதமாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீன்

கடந்த மாதம் 12-ம் தேதி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஆதரவாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் இயக்குநர் பாரதிராஜா. அவர் பேசுகையில், தமிழக அரசை மிரட்டும் வகையிலும், தேசத்துக்கு விரோதமாகப் பேசியதாகக் கூறி அவர் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினரைத் தாக்கத் தூண்டியதாகக் கூறி, அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தினமும் காலை 10:30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.