`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலை!’ - கொந்தளிக்கும் வைகோ

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.   

வைகோ

2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனல் மின் நிலைய பணிகள் தொடக்க விழாவுக்கு துாத்துக்குடி வந்தபோது, அவருக்கு எதிராகக் கறுப்புகொடி காட்டிய வழக்கில் வைகோ உள்ளிட்டவர்கள் துாத்துக்குடி ஜெ.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,``தூத்துக்குடி வரலாற்றில் மே 22-ம் தேதி என்பது துக்கமான, ரத்தக்கரை படிந்த நாளாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருமுறை, 15,000 பேர் வரை கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அப்போது மக்களைக் கைது செய்து அடைக்க, மண்டபம் இல்லை எனச் சொல்லி அந்தந்த இடத்திலேயே அமர வைத்து இரவு 7 மணிக்கு விடுதலை செய்தது காவல்துறை. இப்போதும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால், அதை விடுத்துவிட்டு மக்களை அரசு சுட்டுக் கொல்வது,  அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இது தமிழக அரசின் திட்டமிடப்பட்ட படுகொலை.

இனி போராட வேண்டும் என்ற சிந்தனையே வரக் கூடாது என்ற நோக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாகத் தமிழக அரசு செயல்பட்டுள்ளது என்பது 100 சதவிகிதம் உண்மை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி, ஆலையை மூடும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என அரசு தரப்பு சொல்கிறது. இந்த உத்தரவு மதில் மேல் பூனையாகத்தான் உள்ளது. பாபா ராம் தேவ், சத்குரு ஆகியோருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் என்ன சம்பந்தம்? தூத்துக்குடியைப் பற்றியும் மக்களின் நிலைப்பாடு குறித்தும் அவர்களுக்கு  என்ன தெரியும்?

காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையில் தமிழகத்துக்கான தண்ணீர் அளவை குறைத்து, உச்ச நீதிமன்றம் அநீதியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசு, காவிரியில் தண்ணீர் இல்லை எனக் கூறும் நிலையில், தமிழக அரசு வெற்றிவிழா கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. இந்தத் தீர்ப்பு வஞ்சகமான தீர்ப்பு. நடுவர் மன்றம் சொன்னதுபோல ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. கர்நாடகா அரசை தமிழகத்துக்கு அனுப்ப வலியுறுத்துவதும் இதற்கு தமிழகம் வெற்றி விழா கொண்டாடுவதும் இங்கே வேடிக்கையாக உள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!