`வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தாதே' - திருச்சியில் மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்தத்தை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மறியல்
பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், அவர்கள் மீது வன்கொடுமை செய்பவர்களைக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தது.ஆனால், அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. இந்தத் தீர்ப்பினால் வன்கொடுமை செய்தவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்துள்ளது. எனவே, இந்தப் புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
மறியல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாமல் ஆக்கும் விதத்தில் அவசர சட்டம் ஒன்றை இயக்க வேண்டும்,
இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!