சிவகாசியில் வெறிநாய்கள் கடித்ததில் ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு!

வெறிநாய்கள் கடித்ததில் 33 பேர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், சிவகாசியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறி நாய் கடிக்கு

சிவகாசி பி.கே.எஸ் சாலை, பாரதி நகர், பேருந்து நிலையம் உட்படப் பல பகுதிகளில் நடமாடிய பொதுமக்களை, மூன்று வெறி நாய்கள் துரத்தி துரத்திக் கடித்துள்ளது. மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.  ஜன நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய சாலைகளில் வெறி நாய்கள் கடித்துள்ளது. இதில் ஐந்து துப்புரவுப் பணியாளர்கள், ஒரு பள்ளி மாணவி உட்பட பொதுமக்கள் 33 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.  காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

அனைவருக்கும் தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  வெறிநாய்கள் கடித்த அனைவருக்கும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. மிகவும்  படுகாயம் அடைந்த 15 பேரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது. ஒரே நாளில் 33  பேரை வெறி நாய்கள் கடித்துள்ள சம்பவம் சிவகாசி பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெருக்களில் மக்கள் நிம்மதியாக நடமாட வேண்டுமென்றால், நகராட்சி நிர்வாகம், வெறி நாய்களைப் பிடித்துச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!