`சென்னையில் இடி மின்னலுடன் மழை' - சுழற்காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன!

மழை

சென்னையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால், நேற்று வழக்கத்தைவிட, வெயில் தாக்கம் மிக குறைவாகவே இருந்தது. மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசாக ஆங்காங்கே மழை பெய்தது. அதன்பிறகு, இரவு 10 மணிக்கு மேல் சென்னை நகரில் மழை பெய்தது. புறநகரிலும் மழை பெய்தது. இரவு 1 மணி வரை சென்னை நகரின் மையப்பகுதியில் மிதமான மழை பெய்தது. அத்தோடு, சூறைக்காற்றும் வீசியது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. விடிய விடிய காற்று வீசியது. நள்ளிரவுக்குப் பின், மழை தூரல் இருந்தது. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெப்பம் தணிந்தது. 

இதுகுறித்து ஏற்கெனவே, சென்னை வானிலை மையம் முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், ``வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தமிழக மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சென்னையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை தாண்டி பலத்த காற்றுடன் இரவு விடிய விடிய மழை பெய்தது. மழை பொழிவு அதிகம் இல்லை என்றாலும் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!