வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (03/07/2018)

கடைசி தொடர்பு:07:40 (03/07/2018)

ஆதிதிராவிடர் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை!

புத்தகம்

தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் ( (TAMIL NADU ADI DRAVIDAR & TRIBAL ART AN D LITERATURE SOCIETY) நிதியிலிருந்து 2017-2018-ம் ஆண்டுக்கான  ஆதிதிராவிடர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர் மற்றும் ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட ரூ.40,000 வரை நிதியுதவி அளிக்கப்படும். பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

இதுகுறித்த விவரங்களை தமிழக அரசின் tn.gov.in என்ற இணையதளத்தில்  அறிந்துகொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். முறையான விண்ணப்பத்துடன், படைப்புகள் எழுத்து வடிவில், 2 பிரதிகள் விண்ணப்பதாரரின் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டு, தமிழக அரசுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.8.2018. அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர், ஆதிதிராவிடர் நலம், சேப்பாக்கம், சென்னை-05.

நீங்க எப்படி பீல் பண்றீங்க