``தி.மு.க-வை ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறப் போவது இல்லை” -திருமாவளவன்

``பா.ஜ.க ஆட்சியில் ஆணவக் கொலைகள் தலை விரித்தாடுகின்றன” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

தி.மு.க. மகளிரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் புள்ளி விவரப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அந்த அளவுக்குத்தான் இருக்கிறது மத்திய பா.ஜ.க-வின் ஆட்சி. ஆணவக் கொலைகள் தலை விரித்தாடுகின்றன. சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கொஞ்சம் கூட இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. தி.மு.க-வை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று சாதியவாதிகளும்,  மதவாதிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அணிவகுத்து நிற்கின்றன. அவர்களின் அந்த எண்ணம் எப்போதும் நிறைவேறப் போவதில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில்கூட பா.ஜ.க. மீண்டும் வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால் கல்வி, அதிகாரம் உள்ளிட்டவைகள் பெண்களுக்கு மறுக்கப்படும். மதவாத சக்திகளை விரட்டியடிக்கும் மாபெரும் பொறுப்பு மகளிரணிக்கு உள்ளது. தேர்தல் கணக்குகளுக்காக அல்ல. மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்துள்ளன” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!