உலகிலேயே அதிகம் மீன் பிடிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

கடல் மற்றும் நன்னீரில் அதிகம் மீன் பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு எல்லைகளில் மீன் பிடிக்கும் எண்ணிக்கையில் சீனா அதிகப் படகுகளுடன் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, ஆசியா முழுவதும் சுமார் 3.5 மில்லியன் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சீனாவில் மட்டும் 1.07 மில்லியன் படகுகள்  பயன்படுத்தப்படுகின்றன. அங்கு 6,86,766 மோட்டார் படகுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து இந்தோனேஷியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பெரு, இந்தியா, வியட்னாம், மியான்மர், நர்வே போன்ற நாடுகள் உள்ளன.

கடந்த 2014-ம் வருடம் மட்டும் சுமார் 418 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, சீன அரசு மீனவர்களின் மானியம் போன்ற விஷயங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், 2020-ம் ஆண்டுக்குள் 2.3 மில்லியன் டன் வரை மீன் பிடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனர்கள் அதிகமாக மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!