எங்கள் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி..! லாலு பிரசாத் மகன் குற்றச்சாட்டு

எனது பேஸ்புக் கணக்கு பா.ஜ.கவினரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.கவினர், எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். 

தேஜ் பிரதாப் யாதவ்

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். அவர், நிதிஷ் குமார் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவரது, பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவில், 'என்னுடைய அம்மா ராப்ரி தேவி, நான் எழுப்பும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதேநேரத்தில் என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு வற்புறுத்துகின்றனர். நான், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்' என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவு பீகார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இதுகுறித்து தெரிவித்த தேஜ் பிரதாப் யாதவ், 'என்னுடைய பேஸ்புக் பக்கம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினரால் ஹேக் செய்யப்பட்டது. எங்களுடைய குடும்பத்துக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். 2019 தேர்தலில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸை தோற்கடிப்போம். என்னுடைய குடும்பம்தான் என்னுடைய வாழ்க்கை. என்னுடைய சகோதரர்தான் என்னுடைய பலம்' என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!