``ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்” - நெய்மரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Neymar trolled in social media

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (03/07/2018)

கடைசி தொடர்பு:13:46 (03/07/2018)

``ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்” - நெய்மரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நெய்மர்

ரஷ்யாவில் தற்போது உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இப்போது கால்பந்து திருவிழா குறித்துதான் பேச்சு. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடப்புச் சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றில் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. நட்சத்திர வீரர்கள் கொண்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிகளும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுடன் வெளியேறியது. தற்போது பிரேசில், கொலம்பியா, இங்கிலாந்து அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில்  வெற்றிபெற்ற பிரேசில் காலிறுதியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

நெய்மர்

இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் நெய்மரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. சாதாரண மோதலுக்கு நெய்மர், அதிகம் நடிப்பதாக நெட்டிசன்களும் அவரை வறுத்து எடுக்கின்றனர்.  இதுதான் இப்போ உலகக்கோப்பை வைரல். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பலர் நெய்மருக்குச் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதைவிட ஆஸ்கர் விருதுதான் வழங்க வேண்டும் எனக் கலாய்த்து வருகின்றனர். அவர் கீழே விழுந்து உருண்டதை வைத்து மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என வறுத்தெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் பிரேசில் ரசிகர்கள் நெய்மருக்கு உண்மையாகவே காயம்பட்டதாக வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். 

நெய்மர்