பணத்தை எப்போது வழங்குவீர்கள்..? லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆட் பீரோ நிறுவனத்துக்கு வழங்கவேண்டிய தொகையை வழங்குவது குறித்து வருகிற 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. 

லதா ரஜினிகாந்த்

`கோச்சடையான்' படத் தயாரிப்பின்போது பெற்ற 10 கோடி ரூபாய் கடனில் எட்டரைக் கோடி ரூபாயைத் திரும்பத் தரவில்லை. அதைத் திரும்பத் தர உத்தரவிட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் மீது ஆட்பீரோ என்ற நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஆட் பீரோ நிறுவனத்துக்கு வழங்கவேண்டிய தொகையை எப்போது வழங்குவீர்கள். பணத்தைத் திரும்பத் தருவது குறித்து வருகிற 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணையை எதிர்கொள்ளவேண்டிவரும்' என்று கண்டனங்களைத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!