மாணவிக்கு பாலியல் தொல்லை! - ஆசிரியரை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர் | Parents attacked teacher over allegedly harass girl student in Kanyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (03/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (03/07/2018)

மாணவிக்கு பாலியல் தொல்லை! - ஆசிரியரை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர்

ன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆசிரியர் செல்லம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் செல்லம் (54) பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார். நேற்று ஆறாம் வகுப்பு மணவியிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறியதுடன் இன்று பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ஆசிரியர் காயமடைந்தார். போலீஸார் அந்த ஆசிரியரை வேகமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே குளச்சல் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.