தீபாவளி பட்டாசுகளை பொதுவான இடத்தில் வெடிப்பதற்கு ஊராட்சியில் தீர்மானம்! 

தீபாவளி திருநாள் அன்று வெடிக்கப்படும் பட்டாசு பொருள்களால்  சுற்றுப்புறசூழல் மாசுபடுவது குறித்து, பொது மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்திடவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை காப்பது பற்றியும்,  வரும் காலங்களில்  பட்டாசுகளை வெடிக்க ஊராட்சிகளில் பொதுவான இடங்களை தேர்வு செய்து அங்கேயே எல்லோரும் வெடித்திடுவது என்று நரிக்குடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தீபாவளி பட்டாசு

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் தலைமையில் நரிக்குடியில்  நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், ஒரே இடத்தில் வெடி வெடிப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றியும், ஒலி மாசினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, விழிப்பு உணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.  இக்கூட்டத்தின் முடிவில் நரிக்குடி கிராமத்தில் தீபாவளி திருநாள் அன்று பட்டாசுகள் வெடிக்க  ஊராட்சி கண்மாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று விருதுநகர்  மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் கூட்டங்கள் நடத்தி  பட்டாசு வெடிக்க பொதுவான இடத்தை தேர்வு செய்து சுற்றுச் சூழலை ஓரளவு குறைக்கும் முயற்சியில்  கிராம மக்களின் சம்மதத்தை பெற மாவட்ட நிர்வாகம் களம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!