ஜெயலலிதா அறிவித்த மோனோ ரயில் திட்டத்தை நிறுத்தியது தமிழக அரசு!

'இடப் பற்றாக்குறை காரணமாக, ஜெயலலிதா அறிவித்த 'மோனோ ரயில் திட்டம்' நிறுத்திவைக்கப்பட்டுள்ளது' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தங்கமணி

2001-2006-ம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் 'மோனோ ரயில்' கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.  அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியது. பின்னர்,    2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றாலும் மோனோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், மோனோ ரயில்திட்டத்தின் நிலைகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் தங்கமணி, 'இடப் பற்றாக்குறையின் காரணமாகவும், மெட்ரோ ரயில் பணி விரிவாக்கம் காரணமாகவும் மோனோ ரயில் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!