தமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில், மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``மேற்குத் திசை காற்றில் ஏற்பட்டுள்ள திசை மற்றும் வேக மாற்றம்  காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில், அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செ.மீ, காஞ்சிபுரத்தில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தென்தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை, ஜூன்1 முதல் 30-ம் தேதி வரை பதிவான மழையின் அளவு 49 மில்லி மீட்டர். இயல்பான அளவு 46 மில்லி மீட்டர் என்பதால், இயல்பை விட ஆறு சதவிகிதம் அதிகம்'’ என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!