மு.க.ஸ்டாலின் - வைகோ திடீர் சந்திப்பு..!

 

வைகோ ஸ்டாலின்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மாலை தேனாம்பேட்டை அண்ணா  அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அறிவாலயத்துக்கு வந்த வைகோவுடன் மு.க.ஸ்டாலின் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஸ்டெர்லைட் பிரச்னை, சென்னை டூ சேலம் எட்டு வழிச்சாலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவ வாய்ந்ததாக தெரிகிறது. அப்போது வைகோவின் கேரள ஆயுர்வேத சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்து அறிந்தார்.

கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலாவில் ஜூன் 30-ஆம் தேதி வரை 17 நாள்  ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார் வைகோ. இதையடுத்து ஜூலை 1-ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதையடுத்து, பிரணாப் முகர்ஜி ராணுவ அமைச்சராக இருந்த போது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில் தூத்துக்குடி இரண்டாவது ஜூடிஷியல் நிதிமன்றத்தில் கடந்த 2-ஆம் தேதி வைகோ ஆஜரானார். அதன் பின்னர், சென்னை வந்த அவர், நேற்று மாலை அறிவாலயத்தில் திடீரென்று மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

கடந்த ஒரு வருடமாக வைகோ தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்ட களத்தில் இருக்கிறார். காவிரி பிரச்னை, நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயணம், ஸ்டெர்லைட் நடைபயணம் என்று பல போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். இந்த போராட்டங்களின் போது அவர் உற்சாகமாக கலந்துகொண்டால் அவரது உடல்நிலையில் அவ்வப்போது சோர்வு ஏற்பட்டது. எனவே புத்துணர்ச்சி பெறுவதற்காக கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார். 17 நாள் சிகிச்சை முடித்த பிறகு அவருக்கு சிகிச்சை குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். வைகோ இப்போது முன்பை விட `ப்ளீச்' என்று இருப்பதாக அவரது கட்சியினர் உற்சாகம் பொங்க சொல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!