''ஜெயலலிதாவுக்கு ஃபேஸ்மேக்கர் கருவி..!'' விசாரணை ஆணையத்தில் அதிர்ச்சித் தகவல்

ஜெயலலிதா

'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று அக்கட்சியின்  மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசிவந்தார். எனவே, 'சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, அந்த ஆணையத்தின் தலைவராக இருந்து விசாரணை நடத்திவருகிறார். பல்வேறு தரப்பினரிடம் அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக சமர்பித்துவிட்டார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த விவேக், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரும் சாட்சியம் அளித்துவிட்டனர்.

இந்த விசாரணையில், ''ஜெயலலிதா பாதாம் அல்வா சாப்பிட்டார், சூஸ் குடித்தார். டி.வி-யில் நிகழ்ச்சி பார்த்தார்'' என்றெல்லாம் கூறிவருவதாக என்று தகவல் வெளியே வந்து கொண்டு இருக்கிறது.  நேற்று, விசாரணை ஆணையத்தில் அப்போலோ டாக்டர் சினேகாஶ்ரீ ஆஜரானார். அவர், சாட்சியம் அளித்தார். அதில், ``செப்டம்பர் 22-ஆம் தேதி, அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு வரும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என்றும் இதனால், அவரது இதயத்தை செயல்பட வைக்க அவருக்கு ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாகவும்" டாக்டர் சினேகாஶ்ரீ சொன்னதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்குமூலம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை ஆணையத்தில் விசாரணையும் குறுக்கு விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து புதுப்புது அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!