'மானசரோவர் யாத்திரை' - மீட்பு உதவி எண் அறிவிப்பு..! | Nepal helpline announced for tamilnadu pilgrimages

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:10:36 (04/07/2018)

'மானசரோவர் யாத்திரை' - மீட்பு உதவி எண் அறிவிப்பு..!

நேபாள யாத்திரை

நேபாளத்தில், இந்துக்கள் புனிதத் தலமாகக் கருதும் கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு, கடந்த ஜூன் மாதம் 1300-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் யாத்திரை சென்றனர். இதில், பலர் திரும்பிய நிலையில், தற்போது அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, தமிழர்கள் உள்பட 700 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக உதவி எண்கள்: 977-9851107006, 977-9851155007, 977-9851107021, 977-9818832398. (தமிழில் விபரம் கேட்கலாம் : 977- 9808500642) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் டி.ஜெயக்குமார், 'தமிழக பக்தர்களை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். தமிழக பக்தர்கள் பற்றிய விவரங்களை உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுகிறவர்கள், கட்டுப்பாட்டு அறையின் 011 21610285 மற்றும் 011 21610286 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். உதவி வரவேற்பு அதிகாரி ஆர்.பாண்டியன் மொபைல் எண் 98685 30677, உதவி தொடர்பு அதிகாரி ஆர்.முத்து பாட்ஷா -9682 19303 ஆகியோரையும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க