கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற மேலும் 96 இந்தியர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 104 பேர் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

கைலாஷ் மானசரோவர் யாத்திரை

(Photo Credit- ANI)

கைலாய யாத்திரைக்காகப் பல நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேபாளம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை கடந்த சில தினங்களுக்குமுன் தொடங்கியது. ஆனால், கடந்த மூன்று நாள்களாக நேபாளத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், பர்சா, சிந்துலி, கைல்கலி, நவல்பரசி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வெல்லப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்து  துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாத்திரைக்காகச் சென்ற 1,200-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள், மழையில் சிக்கி தவித்துவருகின்றனர். சென்னையிலிருந்து சென்ற 19 பேர் சிமிகோட் என்ற இடத்திலும், கர்நாடகாவைச் சேர்ந்த 290 பேர் கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதியிலும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சர்கெட் என்ற பகுதியிலிருந்து இன்று காலை 96 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள், தங்களது பயணத்தை ரத்துசெய்யுமாறு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!