ட்வீட்டை ட்ரம்ப் டெலிட் செய்ய இவர்தான் காரணம்!

'Pore' கவனமாகப் படிக்கிறேன் என்பதற்குப் பதிலாக, தூறல் எனப் பொருள்படும் 'Pour' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள...

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனங்களுக்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை ட்வீட்டை டெலிட் செய்யுமளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அதிகம் விற்பனையாகும் பல புத்தகங்களை எழுதியுள்ளேன். எழுதுவதற்கு ஓரளவுக்கு எனக்குத் திறமையுள்ளது. கவனமாகத்தான் படிக்கிறேன். இருந்தாலும் சில போலிச் செய்திகள் என் ட்வீட்டில் வந்துவிடுகின்றன. அதிலுள்ள சில வார்த்தைகளை முக்கியமாக முன்வைக்கிறேன். அதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை'' என்று எழுதியிருந்தார்.

twitter

இதில் 'Pore' கவனமாகப் படிக்கிறேன் என்பதற்குப் பதிலாக, தூறல் என பொருள்படும் 'Pour' என்ற வார்த்தையை பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள ஹாரிபாட்டர் புத்தகத்தை எழுதிய ஜே.கே.ரெளலிங் 'ஹஹஹாஹஹஹஹஹா என பெருஞ்சிரிப்போடு. அவருக்கு யாராவது சரியான ஸ்பெல்லிங் சொல்லிக்கொடுங்கள். 'Pore'-க்கு பதில் Pour' என்று எழுதியுள்ளார் என்று ட்வீட் செய்ய மாட்டிக்கொண்டார் ட்ரம்ப்.

ட்ரம்ப் - ஜே.கே.ரெளலிங்

பின்னர் சிறிது நேரத்தில் பல ஆங்கில வகுப்பு மற்றும் அகராதி ட்விட்டர் பக்கங்கள் இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லி ட்ரம்பை கலாய்த்தன. ஏற்கெனவே ட்ரம்ப் விவகாரத்தில் ஜே.கே.ரெளலிங் Me Too விஷயத்திலும் குடியுரிமை விஷயத்திலும் குரல்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த உரையாடல்களுக்கு பின் ட்ரம்ப் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு புதிதாகச் சரியான வார்த்தையோடு ட்வீட் செய்தார். பாவம் அவருக்கு அட்மின் யாரும் இல்ல போலனு நெட்டிசன்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகளையும் கலாய்த்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!