``என் மனைவியைக் காப்பாற்றுங்கள்!''- பிரதமர் மோடியிடம் நடிகையின் கணவர் முறையீடு

முன்னாள் பாலிவுட் நடிகை `டார்சான் த வொண்டர் கார்' புகழ் ஆயிஷா டாக்கியாவுக்குத் தொடர்ந்து வந்த மிரட்டல் மெசேஜ்ஜிகளைத் தொடர்ந்து அவருடைய கணவர் ஃபர்ஹான் ஆஷ்மி மும்பைக் காவல்துறையிடமும், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் உதவிக்கேட்டு முறையீடும் ட்வீட்கள்தாம் இப்போது வைரலாகிக்கொண்டிருக்கின்றன. 

மனைவி ஆயிஷா

படம்: http://cdn.odishatv.in

``என்னுடைய முன்னாள் பிசினஸ் பார்ட்னர் காஷிஃப்கானுக்கு எதிராக பாந்தரா காவல்துறையில், வழக்கு பதிவு செய்ததில் இருந்துதான், என் மனைவிக்கும், அம்மாவுக்கும், 7 மாத கர்ப்பிணியாக இருக்கிற என் தங்கைக்கும் தொடர்ந்து மிரட்டல் மெசேஜ்கள் வருகின்றன'' என்று பதறுகிற ஃபர்ஹான், இதைப்பற்றி மும்பைக் காவல்துறையின் டி.சி.பி. பரம்ஜித் சிங் தஹியா (DCP Paramjit Singh Dahiya) விடம் புகார் செய்திருக்கிறார். இந்தப் புகாரின் மீது பரம்ஜித் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனம் நொந்துபோன நடிகை ஆயிஷாவின் கணவர், தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் உதவிக்கேட்டிருக்கிறார். 

ட்விட்ஸ்

அதில், மும்பைக் காவல்துறை மற்றும்  டி.சி.பி. பரம்ஜித் சிங் தஹியாவை டேக் செய்து, என் மனைவியையும், அம்மாவையும், என் கர்ப்பிணி தங்கையையும் மிரட்டுகிறார்கள். என் பேங்க் அக்கவுன்ட்டை  சட்ட விரோதமாக முடக்கியிருக்கிறார்கள். எனக்கு உதவி செய்யுங்கள். பிரதமர் மோடி மற்றும் சுஷ்மா சுவராஜை டேக் செய்து, இந்த விஷயத்தில் நீங்கள் சற்று தலையிடுங்கள்'' என்று உதவி கேட்பதோடு, `பேட்டி பச்சாவ்' என்கிற ஹேஸ் டேக்கையும் இணைத்திருக்கிறார். இது அவருடைய ட்வீட்டை படிப்பவர்களின் மனதை உருக்கும்படி இருக்கிறது. இந்த நிலையில் போன் மேல் போன் செய்தும், மெசேஜ் மேல் மெசேஜ் அனுப்பியும் டி.சி.பி.பரம்ஜித் சிங் தஹியா எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தான் செய்த போன்கால்கள் மற்றும் மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்டையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவிட்டார் நடிகை ஆயிஷாவின் கணவர்  ஃபர்ஹான் ஆஷ்மி!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!