கடலூரில் அரசு விரைவுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

கடலூரில் அரசு விரைவுப் பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸார்

சென்னையிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டு வேளாங்கண்ணிக்குச் சென்றது. இந்தப் பேருந்தில் நடத்துநராகச் சண்முகமும் ஓட்டுநராகச் சேகரும் பணியில் இருந்தனர். பேருந்து கடலூர் ஆல்பேட் சோதனைச் சாவடி பகுதிக்கு சென்றபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கடலூர் மதுவிலக்குப் போலீஸார் அரசு விரைவுப் பேருந்தை நிறுத்தச் சொல்லி சோதனை செய்தனர். பேருந்தில் பார்சல் வைக்கும் இடத்தில் இருந்த சந்தேகத்துக்கு இடமான 2 பார்சல்களைப் போலீஸார் பிரித்துப் பார்த்தனர். அதில் 504 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 2 பார்சலும் யாருடடையது என்று நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். அதில் சென்னை எண்ணூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் குணசேகரன் (35) என்பவர் புதுச்சேரியில் 2 பார்சல்களுடன் பேருந்தில் ஏறியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த குணசேகரனை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் பேருந்தில் பார்சலாக எடுத்துச் சென்ற 504 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!