வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (05/07/2018)

கடைசி தொடர்பு:00:48 (05/07/2018)

நிபா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்குப் பாராட்டு விழா..! அமெரிக்கா புறப்பட்ட பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் பரவிய நிபா வைரஸ் காய்ச்சலை சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயனுக்கு அமெரிக்காவில் பாராட்டுவிழா நடக்கிறது.

கேரள மாநிலத்தில் பரவிய நிபா வைரஸ் காய்ச்சலை சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயனுக்கு அமெரிக்காவில் பாராட்டுவிழா நடக்கிறது.

பினராயி விஜயன்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 20 பேர் மரணமடைந்தனர். பின்னர் கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் வரும் 6-ம் தேதி பாராட்டுவிழா நடத்துகிறது. இதில் கலந்துகொள்வதற்காகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா ஆகியோர் நாளை அமெரிக்கா புறப்படுகின்றனர். பின்னர், அங்கு மலையாள அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பினராயி விஜயன் கலந்துகொள்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் பினராயி விஜயன் வரும் 18-ம் தேதி மீண்டும் கேரளா திரும்புகிறார்.