விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது - 6 லாரிகள் பறிமுதல்! | sand theft team arrested by police

வெளியிடப்பட்ட நேரம்: 02:01 (05/07/2018)

கடைசி தொடர்பு:02:01 (05/07/2018)

விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது - 6 லாரிகள் பறிமுதல்!

விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது செய்ய்பட்டார்;அவரிடமிருந்து 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மணல் கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிசேகர்(49). இவர் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள  மணிமுத்தாறு, கோமுகி ஆறு ஆகிய ஆறுகளில் பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.இவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பகுதி மாவட்டத்தின் கடைகோடியில் இருப்பதால் அரசு அதிகாரிகள் இங்குவருவது அத்தி பூத்தாற்போல் எப்பொழுதாவது நடைப்பெறும் ஒன்றாகும். இதனை  பயன்படுத்திக்கொண்ட மணிசேகர் கடந்த பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மணல்குவாரிகள் மூடப்பட்டதால் மணல் தேவை அதிகரித்தது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட மணிசேகர் இப்பகுதி வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு தொழிலை நன்கு விரிவுபடுத்தி அதிக அளவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், அமைச்சர்  என அனைவருக்கும் புகார் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.   இந்நிலையில் லோக்கல் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கடலூர்  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார்  கடலூர் டெல்டா போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

விருத்தாசலம்

இதனையடுத்து டெல்டா சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமை உள்ள தனிப்படை  மணல் கடத்தல் கும்பலை பிடிக்க கடந்த சில நாட்களாக அப்பகுதியில்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஐவதகுடி கிராமத்தில் மணிமுக்தாற்றில் மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த மணிசேகர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 
6 லாரிகள், 1 ஜேசிபி இயந்திரம், 7 டிரைவர்களை கையும் களவுமான பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிசேகர் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த கும்பல் தலைவன்  மணிசேகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close