வெளியிடப்பட்ட நேரம்: 03:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:03:40 (05/07/2018)

முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுதலை! - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனனை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை

கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தனன். வருமானத்திற்கு அதிகமாக 57 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜனார்த்தனனுக்கு  2 ஆண்டு சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஜனார்த்தனன் மேல் முறையீடு செய்தார்.

 அதேபோல அவரது மனைவி பிரேமாவும் சொத்துக்கள் முடக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,  ஜனார்த்தனனின் விவசாய சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என்று கூறி கடலூர் நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தார். அதே போல அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சொத்துக்கள் முடக்க விதிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஜனார்த்தனன் விடுதலை செய்யப்படவுள்ளார்.