வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:09:12 (05/07/2018)

''கூடங்குளம் அணுமின் நிலையப் பணி... உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை..!'' அமைச்சர் தங்கமணி உறுதி

 

இன்பதுரை தங்கமணி

தமிழக சட்டமன்றத்தில், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, ''நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது. இத்திட்டத்துக்காக, நிலத்தை இழந்தவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று 1999-ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, நிலத்தை இழந்தவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் அங்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்.  இதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதற்குப் பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி,'' வேலைவாய்ப்புகுறித்து 1999-ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யாரெல்லாம் நிலம் கொடுத்துள்ளார்களோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை கொடுக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, 676 பேர் அங்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். நிலம் கொடுத்த 71 பேர் அங்கு பணிபுரிகிறார்கள். இப்போது, அங்கு பி மற்றும் சி கேட்டகரி வேலைக்கு டெஸ்ட் வைத்துள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளார்கள். மேலும், இனி எடுக்க இருக்கும் வேலைவாய்ப்புகளிலும் அணு மின்நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமையில் வேலை கிடைக்க முதல்வரின் ஆலோசனையைப் பெற்று,  இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்காக மத்திய அரசுடன் பேசுவோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க