''தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்..!'' தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் | Edappadi palanisamy statement regarding drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:08:00 (05/07/2018)

''தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்..!'' தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

முதல்வர்


''பயிர்களைக் காக்கவும்,  கால்நடைகளின் தேவைக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி மாவட்டம், கடைமடைப் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைக்கட்டுகளின்மூலம் பாசனம் பெறும் கால்வாய்ப் பகுதிகளில் உள்ள பயிர்களைக் காக்கவும், மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட, விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால், வடக்குப் பிரதான கால்வாய் மற்றும் தெற்குப் பிரதான கால்வாய்ப் பகுதிகளில் உள்ள பயிர்களைக் காக்கவும், மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 6.7.2018 முதல் 4.8.2018 வரையிலான காலத்திற்கு 2000 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க