சத்துணவுப் பொருள்களில் முறைகேடா? - தனியார் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்குப் பொருள்கள் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 75 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 

சத்துணவு

சத்துணவுத் திட்டத்துக்கு பொருள்கள் வழங்கிவரும் கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற தனியார்  நிறுவனத்துக்குச் சொந்தமான 75 இடங்களில் வருமான வரித் துறையினர்  அதிரடிச் சோதனை நடத்திவருகின்றனர்.  தமிழகம் மற்றும் கர்நாடகாவில்,  சுமார்  500 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை, சத்துமாவு ,பருப்பு போன்ற பொருள்களை சப்ளை செய்துவருகிறது.  கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்தின் நிர்வாகியான குமாரசாமி மற்றும் அவரது நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் தமிழகத்தில் மட்டும் 100-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் நடத்துவதாக வந்த தகவலை அடுத்து, இன்று அந்த நிறுவனங்களில் சோதனை  நடத்தப்படுகிறது. சென்னை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.

தற்போது, அனைத்து நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்து வருவதாகவும், இதன் முடிவில்தான் ஊழல் செய்யப்பட்டதா என்பது உறுதியாகும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகளின் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். கிருஷ்டி நிறுவனத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல போலி நிறுவனங்கள் இயங்கிவருவதாகவும் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!